அனைவருக்கும்
இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ....! அறந்தாங்கி என்னும் ....[இது கிராமமா அல்லது வளர்ந்து வரும் ஊரா ...?] நகராட்சியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆளப்பிறந்தான் என்னும் சிற்றூரில் இருந்து பேசுகிறேன் ......... செவ்வாய்க்கிழமை மட்டும் அரண்தாங்கியைப் பார்ப்பவர்கள் நிச்சயம் அடுத்தநாள் ஏமாந்துதான் போவார்கள் .செவ்வாய் கிழமை அறந்தாங்கியில் தர்மம் ஓங்கி இருக்கும் . காலை ௦6.40 ரயிலில் வந்து இறங்கி ,ஸ்டேஷன் ஓரமாக மேக் அப் ஆரம்பிக்கும் ஜோடி ஜோடியாக வந்த நபர்கள் , காவி உடை,கையில் காலில் கட்டு,நொண்டும் நடை..... இப்படி மாறி கையில் கம்புடன் கடை வீதி உலா கிளம்பிவிடுவ[ர் .,இப்போது ஒரு ரூபாய் கொடுத்தால் நம்மை பிச்சைக்காரர்கள் என்கிறார்கள் .யாரிடமாவது சாயங்கால நேரங்களில் சிரித்து வணக்கம் சொல்ல பயமாக இருக்கிறது .வாராக் கடன் தந்தவராகிவிடுவோம் .காலையில் பலர் உயிருக்கு பயந்து ஓடுவது தவிர ,முதுகில் ஷட்டில் காக் மட்டையை வீணை மாதிரி மாட்டிக்கொண்டு போண்டா ,,டீ,சாப்பிட்டு உடம்பு வேர்ப்பவர்கள் உண்டு .வேலை கிடைத்த மறு மாதமே நிலம் வாங்கி [வங்கிக்கடன் வாங்கி] வீடு கட்டுவதே வாழ்க்கை என்று பலர்......[வீடு கட்டி முடிப்பதற்குள் வீட்டுக்கு நான்கு திசை வீட்களுடனும் சண்டை வந்துவிடுவதை தவிர்க்க இயலாது ?] 20 வருடங்களுக்கு முன்பு இந்த வூரில் இருந்த பஞ்சு மில் ௨,அலுமினியம் தொழிற்சாலை , பிளாஸ்டிக் பைப் இண்டஸ்ட்ரி ,பல ஆயில் மில்கள் ,மர அறுவை மில்கள் ,பருப்பு மில்கள் ,ரயிலில் ஏற்ற்றுமதி செய்யும் அளவு இயங்கிய அரிசி ஆலைகள் ........1000 பேருக்கு மேல் மாணவர் இருந்த டி இ எல் சி பள்ளி....பத்து பிரிவுகளுக்கு மேல் ஒவ்வொரு வஹுப்பிலும் மாணவர்கள் இருந்த அரசு ஆண்கள் பள்ளி ......கள்ளர் சந்து, கல்லுப்பட்டரை,அக்ரஹாரம் , அக்னிபஜார்,கலப்பக்காடு,என்று ஒவ்வொரு பகுதிக்கும் என்று தனி அடையாளம் .........இதெல்லாம் இப்போது இல்லை .சுத்துப்பட்டி கிராமமக்கள் பாதிப்பேர் இப்போது அறந்தாங்கியை சுத்த பட்டிக்காடாகவே ஆக்கிவிட்டார்கள்.... டீக்கடைகளில் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி
போண்டா ,உளுந்தவடை ,அப்பம் ,தண்ணி டீ....... இரவு 8 மணிக்குமேல் கடை வீதிகள் காற்றாடுகின்றன .மாத சம்பளம் ,வட்டிக்காசு, வெளிநாட்டுப்பணம், இவைமட்டுமே ஆட்டம் ......... உள்ளூரில் இருந்தவர்கள் பலர் ஓட்டம்...கொலை, கொள்ளை ஏமாற்றூ ,இவை எல்லாம் இன்று இங்கு சாதாரணம்.....பாவத்தில் பங்கு கொள்ள கோவில்களில் கடவுள்களுக்கு பலத்த பூசைமரியாதைகள் காணிக்கைகள்....பான்பராக் ,ஹான்ஸ் ,,மது மாமிசங்கள் என்று பலத்த அன்பவிப்புகள்...... ஓஹோ அறந்தாங்கி......
.....
புதன், 22 டிசம்பர், 2010
திங்கள், 29 நவம்பர், 2010
வியாழன், 4 நவம்பர், 2010
நண்பர்களே .......நான் டேவிட்.......சாம்டேவிட்....
அறந்தாங்கியிலிருந்து ..........
பல விஷயங்கள் பேசுவோம்...
பள்ளிக்கூடம் பற்றி நிறையப் பேசுவோம் ,.....
அறந்தாங்கியிலிருந்து ..........
பல விஷயங்கள் பேசுவோம்...
பள்ளிக்கூடம் பற்றி நிறையப் பேசுவோம் ,.....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)