மனித வர்க்கத்தின் முதலாம் மனிதன் பேர் பெற்றான் ஆதாம் என்று அவனுக்குக் கிடைத்தாள் அழகிய மனைவி ஏவாள் என்றான் தான் பெற்ற அழகிக்கு!
என்றும் போல் இன்பம் சுரந்தது அவர்கள் வாழ்வு சமாதானமாய் அமைந்தது உலகில் பரலோக சுகங்கள் தாராளம் கிடைத்தது அதிலே அவர்தம் வாழ்வு சுகமாய் கரைந்தது
ஆதாம் பெற்ற கட்டளை மனைவியும் அறிந்தனள் ஆதாமைப் போல் இறைவன் முன் மாசற்று இருந்தனள் கணவன் புகழை மங்கிடவிடா மங்கையாய் திகழ்ந்தனள் அதனால் இறைவனின் கட்டளை மதித்தனள் சிறப்பாய்
அண்டம் எங்கும் சமாதானம் கொடுங்கோல் இல்லா நல்லாட்சி வைகுண்டமும் வாழ்த்திப் பாடியது மானிடரை நினைத்து பரமனும் மகிழ்ந்தான்
ஆணை படைத்ததும் பெண்ணையும் படைத்தார் ஆணுக்கு பெண்ணென்று சட்டமும் வைத்தார் உலகம் படைப்பில் ஆறாம் நாளிலே இவர்களும் வாழ்வில் இணைந்தும் கொண்டனர்
ஆதாமை உருவாக்க மண்ணை அளந்தார் ஏவாளை காட்டிட எலும்பினை உடைத்தார் ஜீவராசிகளுக்கு பேர் சூட்டியதுமவனே தன் துணைக்கு ஏற்ற பெயர் வைத்ததும் அவனே
இறைவன் உலவும் தோட்டத்தில் வைத்தார் இவர்களை கவனிக்க அந்தோ நடுவில் உள்ள மரம் தொடாதீர் ஒருபோதும் இறப்புவரும்
ஆணுக்கு கட்டளை கொடுத்ததும் முதலில் ஆறாம் நாள் படைப்பில் படைத்ததும் முதலில் தனிமையாய் இருப்பதே நல்லதல்ல துணையொன்றை தருவதே அடுத்த வேலை
தூங்கிய நேரத்தில் வந்தவள் பெண்ணே தூரமாய் போனவள் தூரத்தில் நின்றாள் சர்ப்பம் நயமாய் ஆவலாய் சொன்னதால் இமைக்கும் நேரத்தில் பழத்தையும் உண்டனள்
இறைவனை தூற்றிட்ட சாத்தானின் தந்திரம் மானிடரை கவிழ்த்திட மாறியது சர்ப்பமாய் சொன்னதை மாற்றி வீண் கதை அளந்தது நம்பவே முடியாததை நம்பவே வைத்தது
நடுவிலே கனிந்த மரம் அதுவோ சாப மரம் காண்போரை மயக்கிடும் கனியோ அதன் வரம் சாத்தான் சர்ப்பமாய் சுழன்ற மரம் இந்நாள் வரைக்கும் காணா மரம்
ஆதாமைக் காணவில்லை அருகில் கண்டிக்கவும் யாருமில்லை அந்நேரத்தில் சர்ப்பம் ஆசையை தூண்டி நின்றதால் நீட்டி பறித்தாள் அந்த சிவந்த கனி
கைகளில் சுவையை காட்டும் அந்த பழம் பார்வைக்கு இதமாய் தெரியும் நறுமணம் ஆசை மேலெழுந்ததால் கட்டளை மறந்தாள் நாயகன் பாசத்தை அறவே துறந்தாள்
பிந்தி வந்தவள் வழியில் தவறிட சர்ப்பம் சந்தர்ப்பம் பார்த்தது சரியாய் அமைந்தது ஐயகோ பாவம் கண்களை மறைத்தது தேடினாள் கணவனை எங்கோ என்று
கரங்களில் பாதியும் வாயில் வழியும் சாறுமாக ஓடினாள் வாழ்வில் முதலாம் பாவத்தின் விளைவு சர்ப்பம் வாய்விட்டு சிரித்ததுகேட்டு நடுங்கினாள் ஐயகோ எனக்கு நடந்தது என்ன? அலறினாள்
பாவத்தின் கோரம் உடலில் தைத்தது உள்ளம் சுக்கு நூறாய் போனது துணையை விட்டு துரோகியை நம்பினேன் எல்லாமே முடிந்தது. இனி..
கணவன் அறியவில்லை நடந்த கூத்லத சர்ப்பத்தின் வஞ்சனை ஏவாளின் பார்வையில் கொடுத்தாள் பழத்தை நீட்டினாள் புகட்டினாள் ஆசை மனனவி ஊட்ட அவனும் தடுக்கவில்லை
படைத்தவரை விடவும் படைப்பு முக்கியமா? பழத்தின் இச்சையால் படைத்தவரை கைவிடாதே கட்டளையை விடவும் முகஸ்துதி முக்கியமா? பொய் வசனிப்பில் துணையின் கண்டிப்பை மறந்திடாதே
பாவஞ் செய்வது பெருந் தவறு பாவத்தை மறைப்பது அதனிலும் கொடிது பாவியாய் வாழ்வது உன் தவறு பாவத்திலே மரிப்பது நரகத்தின் பிடிவிறாந்து
பெற்ற கட்டளை மறந்திட்ட மானிடா சந்தர்ப்பம் இனியும் கிடைத்திட மாட்டா இரண்டாம் ஆதாம் சிலுவையில் தொங்கினார் பாவம் கழுவுவோர் விரையுங்கள் சிலுவையின் அண்டையில்
பாவம் போக்கிடும் இயேசுவின் இரத்தம் கல்வாரி மலையில் காணலாம் வாரீர் இன்றே வேண்டிடும் பாவியின் பாவத்தை நொடியில் நீக்கியே சுகத்தை தருவார்
சாத்தானின் தலையை சிலுவையில் நசுக்கி வெற்றியை ஈட்டி நமக்குத் தந்தார் நம் இயேசுக் கிறிஸ்து வெற்றி பெற்றதால் உனக்கு நித்தியஜீவனும் உண்டு பரலோகம் செல்ல அதுவே உன் பாஸ்போட்
இன்னொரு பிறவி வேண்டும்
பதிலளிநீக்குகற்கச் செல்லும் குழந்தைகள்
பாரம் மட்டுமே சுமப்பதால்
பாடம் படிக்கவே
இன்னொரு பிறவி வேண்டும்....
சுமக்க ஆள் இட்டால்
சுமந்தவனுக்கு கூலி கொடுக்க
சுமை போல் கூலி வேண்டும்
அது கொடுத்து முடிக்க
இன்னொரு பிறவி வேண்டும்....
ஒரு பிறவி கொடுத்து
என் மறு பிறவி வரை
கடனாளியானேன்....
கல்விக் கடன் பெற்று
சுமக்க கூலி
சுமந்த கூலி
இரண்டும் கொடுத்த பின்னே
வட்டிக்கே வழியில்லை
அசலுக்கு எங்கே போவேன்
அது கட்டவும்
இன்னொரு பிறவி வேண்டும்...
மனித வர்க்கத்தின் முதலாம் மனிதன்
பதிலளிநீக்குபேர் பெற்றான் ஆதாம் என்று
அவனுக்குக் கிடைத்தாள் அழகிய மனைவி
ஏவாள் என்றான் தான் பெற்ற அழகிக்கு!
என்றும் போல் இன்பம் சுரந்தது
அவர்கள் வாழ்வு சமாதானமாய் அமைந்தது
உலகில் பரலோக சுகங்கள் தாராளம் கிடைத்தது
அதிலே அவர்தம் வாழ்வு சுகமாய் கரைந்தது
ஆதாம் பெற்ற கட்டளை மனைவியும் அறிந்தனள்
ஆதாமைப் போல் இறைவன் முன் மாசற்று இருந்தனள்
கணவன் புகழை மங்கிடவிடா மங்கையாய் திகழ்ந்தனள்
அதனால் இறைவனின் கட்டளை மதித்தனள் சிறப்பாய்
அண்டம் எங்கும் சமாதானம்
கொடுங்கோல் இல்லா நல்லாட்சி
வைகுண்டமும் வாழ்த்திப் பாடியது
மானிடரை நினைத்து பரமனும் மகிழ்ந்தான்
ஆணை படைத்ததும் பெண்ணையும் படைத்தார்
ஆணுக்கு பெண்ணென்று சட்டமும் வைத்தார்
உலகம் படைப்பில் ஆறாம் நாளிலே
இவர்களும் வாழ்வில் இணைந்தும் கொண்டனர்
ஆதாமை உருவாக்க மண்ணை அளந்தார்
ஏவாளை காட்டிட எலும்பினை உடைத்தார்
ஜீவராசிகளுக்கு பேர் சூட்டியதுமவனே
தன் துணைக்கு ஏற்ற பெயர் வைத்ததும் அவனே
இறைவன் உலவும் தோட்டத்தில்
வைத்தார் இவர்களை கவனிக்க
அந்தோ நடுவில் உள்ள மரம்
தொடாதீர் ஒருபோதும் இறப்புவரும்
ஆணுக்கு கட்டளை கொடுத்ததும் முதலில்
ஆறாம் நாள் படைப்பில் படைத்ததும் முதலில்
தனிமையாய் இருப்பதே நல்லதல்ல
துணையொன்றை தருவதே அடுத்த வேலை
தூங்கிய நேரத்தில் வந்தவள் பெண்ணே
தூரமாய் போனவள் தூரத்தில் நின்றாள்
சர்ப்பம் நயமாய் ஆவலாய் சொன்னதால்
இமைக்கும் நேரத்தில் பழத்தையும் உண்டனள்
இறைவனை தூற்றிட்ட சாத்தானின் தந்திரம்
மானிடரை கவிழ்த்திட மாறியது சர்ப்பமாய்
சொன்னதை மாற்றி வீண் கதை அளந்தது
நம்பவே முடியாததை நம்பவே வைத்தது
நடுவிலே கனிந்த மரம் அதுவோ சாப மரம்
காண்போரை மயக்கிடும் கனியோ அதன் வரம்
சாத்தான் சர்ப்பமாய் சுழன்ற மரம்
இந்நாள் வரைக்கும் காணா மரம்
ஆதாமைக் காணவில்லை அருகில்
கண்டிக்கவும் யாருமில்லை அந்நேரத்தில்
சர்ப்பம் ஆசையை தூண்டி நின்றதால்
நீட்டி பறித்தாள் அந்த சிவந்த கனி
கைகளில் சுவையை காட்டும் அந்த பழம்
பார்வைக்கு இதமாய் தெரியும் நறுமணம்
ஆசை மேலெழுந்ததால் கட்டளை மறந்தாள்
நாயகன் பாசத்தை அறவே துறந்தாள்
பிந்தி வந்தவள் வழியில் தவறிட சர்ப்பம்
சந்தர்ப்பம் பார்த்தது சரியாய் அமைந்தது
ஐயகோ பாவம் கண்களை மறைத்தது
தேடினாள் கணவனை எங்கோ என்று
கரங்களில் பாதியும் வாயில் வழியும் சாறுமாக
ஓடினாள் வாழ்வில் முதலாம் பாவத்தின் விளைவு
சர்ப்பம் வாய்விட்டு சிரித்ததுகேட்டு நடுங்கினாள்
ஐயகோ எனக்கு நடந்தது என்ன? அலறினாள்
பாவத்தின் கோரம் உடலில் தைத்தது
உள்ளம் சுக்கு நூறாய் போனது
துணையை விட்டு துரோகியை நம்பினேன்
எல்லாமே முடிந்தது. இனி..
கணவன் அறியவில்லை நடந்த கூத்லத
சர்ப்பத்தின் வஞ்சனை ஏவாளின் பார்வையில்
கொடுத்தாள் பழத்தை நீட்டினாள் புகட்டினாள்
ஆசை மனனவி ஊட்ட அவனும் தடுக்கவில்லை
படைத்தவரை விடவும் படைப்பு முக்கியமா?
பழத்தின் இச்சையால் படைத்தவரை கைவிடாதே
கட்டளையை விடவும் முகஸ்துதி முக்கியமா?
பொய் வசனிப்பில் துணையின் கண்டிப்பை மறந்திடாதே
பாவஞ் செய்வது பெருந் தவறு
பாவத்தை மறைப்பது அதனிலும் கொடிது
பாவியாய் வாழ்வது உன் தவறு
பாவத்திலே மரிப்பது நரகத்தின் பிடிவிறாந்து
பெற்ற கட்டளை மறந்திட்ட மானிடா
சந்தர்ப்பம் இனியும் கிடைத்திட மாட்டா
இரண்டாம் ஆதாம் சிலுவையில் தொங்கினார்
பாவம் கழுவுவோர் விரையுங்கள் சிலுவையின் அண்டையில்
பாவம் போக்கிடும் இயேசுவின் இரத்தம்
கல்வாரி மலையில் காணலாம் வாரீர்
இன்றே வேண்டிடும் பாவியின் பாவத்தை
நொடியில் நீக்கியே சுகத்தை தருவார்
சாத்தான் தடுப்பான் பாவத்தை கூட்டுவான்
குழியில் தள்ளுவான் மானத்தை வாங்குவான்
ஆசை காட்டுவான் இச்சை காட்டுவான்
உலகத்தை தந்து உன்னையே கெடுப்பான்
சாத்தானின் தலையை சிலுவையில் நசுக்கி
வெற்றியை ஈட்டி நமக்குத் தந்தார் நம் இயேசுக் கிறிஸ்து
வெற்றி பெற்றதால் உனக்கு நித்தியஜீவனும் உண்டு
பரலோகம் செல்ல அதுவே உன் பாஸ்போட்
paraloogathukku passport.....supper.....
பதிலளிநீக்கு